புது தில்லி: ஒரு மாதத்தில் வசித்து வரும் அரசு வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கடந்த 1997-ஆம் வருடம் தெற்கு தில்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில், எண் 35 உள்ள அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. அவரது தந்தையான ராஜிவின் மரணத்தைத் தொடர்ந்து, அந்த சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் உள்ள மூவருக்கும் எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கீழ் பாதுகாப்ப்புவழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்தில் வசித்து வரும் அரசு வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஜூன் 30-ஆம் தேதியிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ பிரியங்கா காந்திக்கு தற்போது சி.ஆர்.பி.எப் படை வீரர்களைக் கொண்ட இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசு விதிகளின்படி இத்தகைய பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களுக்கு அரசு வீட்டினை ஒதுக்க இயலாது. அப்படி ஏதேனும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றாலும் அதனை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே பிரியங்கா காந்தி அவர் வசித்து வரும் அரசு வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி எத்தகைய நோட்டீஸும் கிடைக்கப் பெறவில்லை என்று பிரியங்கா காந்தியின் அலுவலகம் மறுத்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


