திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

உத்தரப் பிரதேசத்தில் முதல் ஆர்.எஸ்.எஸ் பள்ளி ஏப்ரலில் தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் முதல்..

News image
Updated On :28 ஜனவரி 2020, 8:00 am

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் முதல் ராணுவ பள்ளி ஏப்ரல் முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இப்பள்ளிக்கு ராஜூ பைய்யா சைனிக் வித்யா மந்திர் (ஆர்.பி.எஸ்.வி.எம்) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்தவர் ராஜூ பைய்யா. 

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., இயக்குனர் கேணல் சிவ் பிரதாப் சிங் கூறியதாவது: 

ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளது. 

ராணுவ பள்ளியில், என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ் பள்ளியில் சேர பிப்ரவரி 23-ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்பின்னர், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பொதுஅறிவு திறன் நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வுக்குப் பின் உடல்தகுதி தேர்வும் நடத்தப்படும். ஏப்ரல் 6 முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. 

இப்பள்ளியில் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. தியாகிகளின் சலுகையாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. வேறு எந்த இட ஒதுக்கீடும் கிடையாது. ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை பணியமர்த்துவதற்கான பணிகளைப் பள்ளி தற்போது தொடங்கி நடத்தி வருகிறது. இந்த பள்ளிக்கான தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கல்விப் பிரிவான வித்யா பாரதி நியமிக்க உள்ளது. 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் சீருடை வழங்கப்படுகிறது. அதன்படி, மாணவர்களுக்கு இளம் ஊதா நிற சட்டை மற்றும் அடர் ஊதா நிற அரைக்கால் பேன்ட் (ட்ரௌசர்) வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சாம்பல் நிற பேன்ட் மற்றும் வெள்ளைநிற சட்டை வழங்கப்படுகிறது. 

மேலும், உண்டு உறைவிட பள்ளியாக மட்டுமே இது செயல்பட உள்ளது. இப்பள்ளியில் முதல்கட்டமாக 6ம் வகுப்பில் 160 மாணவர்களுக்குச் சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்குக் கல்வி, தார்மீக, ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்குவதே இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.