கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு: திகார் சிறையில் ஒத்திகை

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக, திகார் சிறையில் நேற்று ஒத்திகை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2020, 5:49 am


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக, திகார் சிறையில் நேற்று ஒத்திகை நடைபெற்றது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நால்வரையும் தூக்கிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று நான்கு குற்றவாளிகளை தூக்கிடும் வகையில் போலியாக நான்கு பொம்மைகளை வைத்து தூக்கிட்டு சிறை நிர்வாகம் ஒத்திகைப் பார்த்துள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் உடல் எடையையும் கணக்கில் எடுத்து, அந்தந்த எடைக்கு ஏற்ப கல் மற்றும் மணலால் பொம்மைகளை உருவாக்கி அதனை தூக்கிட்டு சிறை நிர்வாகிகள் ஒத்திகை நடத்தியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் குற்றவாளிகள் நால்வரையும், மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லாட் தூக்கிலிடுவார் என்றும் உத்தரப்பிரதேச சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூக்கிலிடவிருக்கும் குற்றவாளிகளுடன், சிறைத் துறை அதிகாரிகள் தினமும் பேசி, அவர்களது மனநிலையை  சோதித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.