பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

காஷ்மீர் நிலைமையை ஆராய 15 நாட்டுத் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை

காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2020, 7:49 am


ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆராய, அமெரிக்கா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இன்று புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

ஸ்ரீநகர் வந்த தூதர்களை, புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் வரவேற்றனர். 15 தூதர்களும் இன்று ஜம்மு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து இன்று இரவு அங்கு அங்கியிருப்பார்கள்.

இவர்கள் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்து ஆளுநர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.