திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தில்லி வன்முறையின் கோரமுகம்: உளவுத் துறை அதிகாரி உடலில் 250 இடங்களில் கத்திக்குத்து

வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 6:58 am

வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 

அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. இக்கொலைச் சம்பவத்தில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் முக்கிய பங்கு வகித்ததாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

அவரது உடலில் 250 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தில்லி வன்முறையின் ஒரு கோரமுகமாகப் பார்க்கப்படுகிறது.

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, சமூக விரோதக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏராளமான வீடுகளும், கடைகளும் தீக்கிறையாகின. ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.