ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லி வன்முறை: செல்போன் செயலி மூலம் வாகனங்களைக் குறிவைத்துத் தாக்கிய சமூக விரோதிகள்

தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 6:28 am

தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது, குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

பொதுத் தகவல்கள் சமூக விரோதிகளின் கையில் சிக்கினால் என்னவாகும் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது.

அதாவது, தில்லியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்கள் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கு, செல்போன் செயலி மூலம், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொடுத்தால், அதில் வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் செல்போன் செயலி மூலம் சமூக விரோதிகள், ஒரு வாகனம் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது என்பதை கண்டறிந்து, அதனை தீக்கிரையாக்கியும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுபோன்ற ஒரு சில செல்போன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அந்த செயலிகளில், ஒருவர், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை போட்டால் போதும், அந்த வாகன உரிமையாளரின் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் தெரிய வரும்.

இன்னும் சில செல்போன் செயலிகளில், வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்தால் கூட போதும், அதன் முழு விவரங்களையும் அள்ளிக் கொடுத்துவிடும்.

ஒரு பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர்தான் வசிக்கிறார்கள் என்று தெரிந்து, அங்கு வந்த சமூக விரோதிகள் சாலைகளில் நின்றிருந்த வாகனங்களின் பதிவு எண்களை செல்போன் செயலியில் பதிவிட்டு, அதன் உரிமையாளர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அறிந்து கொண்ட பிறகே வாகனங்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இங்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.

அதே சமயம், வாஹன் டேட்டா (வாகனங்களின் தகவல்) என்ற பெயரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் தகவல்கள், தனியாருக்கும் பரிமாறப்படுகிறது. லாப நோக்கத்துடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தனியாருடன் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற தகவல்கள், தவறான முறையில் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.