ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ஐ.நா. தகவல்

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது

News image
Updated On :26 பிப்ரவரி 2020, 12:27 pm

தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை இரண்டு காவலர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் தில்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தலைநகர் தில்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடகிழக்கு தில்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குரோட்டஸ், தில்லியின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும், செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில்,  ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். பாதுகாப்புப்படையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.