திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பாலியல் தொல்லை அளித்த பப் உரிமையாளர் மீதான புகார் வாபஸ்

ஹைதராபாத் பஞ்சகுட்டாவிலுள்ள லிஸ்பன் பப்பின் உரிமையாளர் முரளி கிருஷ்ணா என்பவர் மீது  போலீஸார் பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றை பதிவு செய்திருந்தனர்.  

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 5:24 am

ஹைதராபாத் பஞ்சகுட்டாவிலுள்ள லிஸ்பன் பப்பின் உரிமையாளர் முரளி கிருஷ்ணா என்பவர் மீது  போலீஸார் பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றை பதிவு செய்திருந்தனர்.  ஆனால் அந்தப் புகாரை அளித்த பெண் நடனக் கலைஞர் ஒரு நாள் கழித்து, புகாரை வாபஸ் பெறுவதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

பப் உரிமையாளர் முரளி கிருஷ்ணா மீது பொய்யான புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரைப் போலீஸாரிடமிருந்து திரும்பப் பெற விரும்புவதாகவும் கூறி ஒரு விடியோ வெளியிடப்பட்டது. புகார் அளித்த நேரத்தில், அவர் தனது குடும்ப பிரச்னைகள் குறித்து வருத்தத்தில் இருந்தார் என்று கூறினார்.

இருப்பினும், பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் வழங்கிய பின்னர் புகார்களைத் திரும்பப் பெற சட்டத்தில் அனுமதி இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இரு சாராரும் இந்தப் பிரச்னையில் சமரசம் செய்ய விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றும் கூறினர்.

நேற்று, லிஸ்பன் பப்பில் டான்ஸராகப் பணிபுரிந்து வரும் திருமணமான 23 வயது பெண் ஒருவர், அந்தப் பப் உரிமையாளரான முரளி கிருஷ்ணாவால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.