திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கேரளத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் லாரி ஒன்று அடுத்தடுத்து வந்த வாகனங்களின் மீது தாக்கிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். 

News image

Three killed in Ker road mishap

Updated On :31 டிசம்பர் 2020, 5:47 am

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் லாரி ஒன்று அடுத்தடுத்து வந்த வாகனங்களின் மீது தாக்கிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். 

லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலக்காடு மற்றும் திருச்சூர் நெடுஞ்சாலைக்கு இடையில் இடத்தில் கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களில் மோதியதாக கூறப்படுகிறது. 

இது மேலும், சில இருசக்கர வாகனங்களையும் தாக்கியதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலை 6.50 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மற்றும் கார் ஓட்டுநர் பலியாகியுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணத்தை காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.