பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹைதராபாத் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பலர் காயம்

ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

News image

ஹைதராபாத் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பலர் காயம்

Updated On :12 டிசம்பர் 2020, 11:31 am


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

விந்தியா ஆர்கானிக் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தீப்பற்றிய ரசாயன ஆலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக மூன்று தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளன. தீ விபத்து குறித்து தங்களுக்கு நண்பகல் 1.30 மணிக்கு தகவல் வந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரசாயன ஆலையில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. வெடிச்சத்தம் கேட்ட போது, ரசாயன ஆலையின் மேற்கூரை பிய்ந்து காற்றில் பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.