மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

லே-ஜம்மு இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்

லே மற்றும் ஜம்மு இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினார்.

News image

Leh-Jammu flight operations resume

Updated On :11 டிசம்பர் 2020, 9:56 am

லே மற்றும் ஜம்மு இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறினார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமானச் சேவையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியது. 

லடாக் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் வேண்டுகோளுக்கிணங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை முதல் லே மற்றும் ஜம்முவுக்கு இடையில் ஏர் இந்தியா விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த விமானங்கள் இயக்கப்படும். லே மற்றும் ஜம்மு இடையே விமானங்கள் மீண்டும் தொடங்குவது பல மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. 

கடுமையான பனிப்பொழிவு காரணமாக லே-ஸ்ரீநகர் மற்றும் லே-மணாலி சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், லடாக் மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்குப் பயணிக்க விமானங்களை மட்டுமே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.