சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 96.21 ஆக உயர்வு

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 96.21 ஆக உயர்வு

Updated On :4 டிசம்பர் 2020, 6:00 am

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 631 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.72 லட்சமாக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 8,826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 2 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,467ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 96.21 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 0.53 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 57,405 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 56.62 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.