பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாஜகவுக்கு வாக்களிக்காததால் துன்புறுத்தப்பட்டதாக தலித் குடும்பம் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒரு தலித் குடும்பத்தை அந்த மாநில அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த

News image

பாஜகவுக்கு வாக்களிக்காததால்.. துன்புறுத்தப்பட்ட தலித் குடும்பம்

Updated On :2 டிசம்பர் 2020, 6:34 am


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால், ஒரு தலித் குடும்பத்தை அந்த மாநில அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரின் உறவினர்கள் துன்புறுத்தலுக்கு பயந்து, குழந்தைகள், பெண்கள் பல ஒரு குடும்பமே கடந்த சில நாள்களாக ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்பு வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

தங்களது துன்புறுத்திய சுரேஷ் தாக்கத் ரத்கேடாவின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், போஹ்ரி பேரவைத் தொகுதியில் எங்களுக்கு வாக்குரிமை உள்ளது. எங்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால் நாங்கள் யானைச் சின்னத்தில்தான் வாக்களித்தோம். அப்போதிலிருந்து எங்களை பாஜக அமைச்சர் சுரேஷ் தாகத் ரத்கேடாவின் உறவினர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். எங்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டும், வீடு புகுந்து அடித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். எல்லாமே பாஜகவுக்கு வாக்களிக்க மறுத்ததால்தான் என்கிறார்கள்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் ஊருக்குச் செல்ல மாட்டோம் என்று கூறுகிறார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த தலைவி, வெட்டவெளியில் தனது இடுப்பில் இரண்டு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு சமைத்தபடி. உள்ளூர் காவல்நிலையத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்காததால்தான நாங்கள் இங்கு தஞ்சமடைந்துள்ளோம் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.