பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மீண்டும் தாக்கும் கரோனா; அதிர்ச்சியில் உறையும் தில்லிவாசிகள்

தலைநகர் தில்லியில் கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகக் கிடைத்த தகவல்கள், தில்லிவாசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

News image

மீண்டும் தாக்கும் கரோனா; அதிர்ச்சியில் உறையும் தில்லிவாசிகள்

Updated On :2 டிசம்பர் 2020, 9:11 am

தலைநகர் தில்லியில் கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகக் கிடைத்த தகவல்கள், தில்லிவாசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

அதேவேளையில், கரோனா தொற்று ஏற்பட்டால், அந்த தொற்றின் இறந்த செல்கள் எத்தனை நாள்களுக்கு மனித உடலில் நீடிக்கும் என்பது குறித்த விவாதங்களும் இதனூடே எழுகிறது.

கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட தில்லி அரசின் கீழ் இயங்கும் ஒரு மருத்துவமனையில், சமீபத்தில் ஐந்து மருத்துவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்கள் என்று அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த மருத்துவர்கள் அனைவருமே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே தொற்று பாதித்து, சிகிச்சையின் பலனாக குணமடைந்து கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். ஆனால், எப்படியே இரண்டாவது முறையாக அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேருக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய விஷயம் என்னவென்றால், முதல் முறை அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டபோது, எந்த அறிகுறியும் காணப்படவில்லை. ஆனால் இந்த முறை அவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக உள்ளன என்கிறார்கள்.

இதனால், மருத்துவமனை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவால் எழுந்துள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனாவிலிருந்து இவர்கள் மீண்ட பிறகு அவர்களை மறுபடியும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது முறையும் கரோனா தொற்று பாதிக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை, அதுவே அவர்களது உயிருக்கும் ஆபத்தாக முடியலாம், ஏற்கனவே அவர்களது உடல்நிலை மிகவும் பலவீனமாக உள்ளது, மூன்றாவது முறை கரோனா தொற்றினால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதேப்போன்று சர் கங்கா ராம் மருத்துவமனையிலும் ஒரு மருத்துவ ஊழியருக்கு இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுச் சென்ற நோயாளி ஒருவரும், மீண்டும் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில்தான், இறந்த கரோனாவின் செல்கள் உடலில் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவரின் உடலில் இறந்த கரோனாவின் செல்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், அது அவர்களுக்கு ஏற்பட்ட தொற்றின் தீவிரத்தைப் பொறுத்தது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.