/

ஒடிசாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,371 பேர் பாதிப்பு

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,371 கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை இல்லாத ஒரு நாள் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image

Odisha registers record single-day spike of 3,371 corona cases

Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:22 am

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,371 கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகியுள்ள பாதிப்பை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 87,602 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 441 ஆக உள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், 2,053 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 1,318 பேர் உள்ளூரில் இருந்தும் பதிவாகியுள்ளன. 

அதிகபட்சமாக குர்தா மாவட்டத்தில் (547) பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன, தொடர்ந்து கட்டாக் (357) மற்றும் கஞ்சம் (196) பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் தலா 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளன.

தற்போது 27,638 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 59,470 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.