இங்கிலாந்தில் உணவுத் தயாரிக்கும் நிறுவனத்தில் 72 தொழிலாளர்களுக்கு கரோனா
இங்கிலாந்தின் நாட்டிங்ஹம்ஷியரில் உள்ள உணவுத் தயாரிக்கும் நிறுவனத்தில் 72 தொழிலாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இங்கிலாந்தின் நாட்டிங்ஹம்ஷியரில் உள்ள உணவுத் தயாரிக்கும் நிறுவனத்தில் 72 தொழிலாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உணவுத் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தில் பணியாற்றும் 72 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருசிலருக்குத் தொற்றுக்கான அறிகுறி இருந்தது. இதையடுத்து, அங்கு பணியாற்றும் 701 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 72 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், அங்கு பணியாற்றும் 1,600 ஊழியர்களுக்கு பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவை மையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நார்தாம்ப்டனில் சாண்ட்விச் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 300 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.
சுமார் 2,100 பேர் பணியாற்றும் கிரீன்கோர் தொழிற்சாலையில், ஊழியர்கள் சிலர் தன்னைத்தானே சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...