/

ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன்: சுவாமி மிரட்டல்

ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்  சுவாமி தெரிவித்துள்ளார்.

News image

ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Updated On :14 ஆகஸ்ட் 2020, 11:48 am

புது தில்லி: ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்  சுவாமி தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதற்கான கடைசி நாளாக இம்மாதம் 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு முன்பே அறிவித்து விட்டது.

அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படும் தகவல்களின்படி நாட்டின் மிகப்பெரிய தனியார் குழுமமான டாட்டா, ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ‘அவர்களுக்கு’ விற்கப்பட்டால் நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்  சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

ஏர் ஏசியா நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த பண மோசடி வழக்கு, துபாயில் தீவிரவாதி ஒருவருக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு, விஸ்தாரா விமான நிறுவனத்தை ஏர் ஏசியா நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்குவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் மோசடி மற்றும் நீரா ராடியா டேப்புகள் விவகாரம் என அனைத்தையும் தாண்டி, ஏர் இந்தியா நிறுவனம் ‘அழுகிய டி- (Rotten T)-க்கு விற்கப்பட்டால் அரசின் முக்கியப் புள்ளிகள் மீது நான் கிரிமினல் வழக்குத் தொடருவேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.