காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மூவர்ணக் கொடி நிறத்தில் முகக்கவசம்: இஸ்லாமிய பெண்கள் அமைப்பு கண்டனம்

மூவர்ணக் கொடி நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு, அனைத்து இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
மூவர்ணக் கொடி நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு, அனைத்து இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

IANS

லக்னௌ: மூவர்ணக் கொடி நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு, அனைத்து இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய வாரியத்தின் தலைவர் சைஸ்டா அம்பர் கூறியதாவது:

சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவர்ணக் கொடியின் நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் தகவல் கிடைத்தது. தேசியக் கொடிக்கு அவமரியாதை இழைக்கும் இந்தச் செயலை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

முகக்கவசம் என்பது கரோனா பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுவது. ஓரிரு முறை உபயோகித்த பின்னர் தூக்கி வீசப்படுவது. மூவர்ணக் கொடி நிற முகக்கவசங்கள் முறையாக ஒழிக்கப்படுகின்றனவா என்பதை யார் எப்படி கண்காணிப்பது?

தேசத்தின் பெருமைக்குரிய அடையாளத்தை இப்படி வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.