/

நாட்டில் கரோனா தொற்று இன்னும் தீவிரமடையவில்லை: எய்ம்ஸ் இயக்குநர்

இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் இன்னும் உச்சமடையவில்லை, அவ்வளவு ஏன் தீவிரமாகக்கூட மாறவில்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

News image

நாட்டில் கரோனா தொற்று இன்னும் தீவிரமடையவில்லை: எய்ம்ஸ் இயக்குநர்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 9:36 am


புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் இன்னும் உச்சமடையவில்லை, அவ்வளவு ஏன் தீவிரமாகக்கூட மாறவில்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

நாட்டில் இரண்டு நாள்களில் ஒரு லட்சம் பேருக்கும் மேல் கரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் ரந்தீப் குலேரியா இந்தக் கருத்தை முன் வைத்துள்ளார்.

ஜனவரி 30-ம் தேதி நாட்டில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி 23 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 46 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

ரந்தீப் குலேரியா கூறுகையில், இது வெறும் பரிசோதனை நேரம்தான், நாட்டின் எதிர்ப்பு சக்தி சோதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் இன்னும் உச்சம் தொடவில்லை, அவ்வளவு ஏன், தீவிரமாகக்கூட மாறவில்லை என்கிறார்.

தடுப்பு மருந்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது. அதேவேளையில், நம் நாட்டுக்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கும் சேர்த்து தடுப்பு மருந்தை தயாரிக்க முடியும்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கரோனா தடுப்பு மருந்துகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பதில் பல கட்டங்களில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.