வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

எடியூரப்பாவின் மகளுக்கு கரோனா தொற்று உறுதி

கா்நாடக முதல்வா் பி.எஸ் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image
Karnataka CM, his daughter test positive for COVID-19
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

UNI


பெங்களூரு: கா்நாடக முதல்வா் பி.எஸ் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் எடியூரப்பாவுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாத நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். 

இந்நிலையில், தற்போது அவரது மகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்றிரவு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், மாநில பாஜக துணைத் தலைவரும் முதல்வரின் மகனுமான பி.டி விஜயேந்திரா மருத்துமனைக்குச் சென்று அவரது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

தனது தந்தை நன்றாக இருக்கிறார். மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அவர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறினார். 

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, முதல்வரின் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், முதல்வர் எடியூரப்பா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.