இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

‘இந்தப் பக்கமே வராதே’: இஸ்லாமிய காய்கறிக்காரரை எச்சரித்த பாஜக எம்எல்ஏ!

‘இந்தப் பக்கமே வராதே’ என இஸ்லாமிய காய்கறிக்காரரை பாஜக எம்எல்ஏ எச்சரித்த விடியோ இணைத்தில் வைரலாகப் பரவி வருகிறது.  

News image

பிரிஜ் பூஷன் சரண்

Updated On :29 ஏப்ரல் 2020, 10:14 am

லக்னௌ: ‘இந்தப் பக்கமே வராதே’ என இஸ்லாமிய காய்கறிக்காரரை பாஜக எம்எல்ஏ எச்சரித்த விடியோ இணைத்தில் வைரலாகப் பரவி வருகிறது.  

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரிஜ் பூஷன் சரண். இவர் இஸ்லாமிய காய்கறிக்காரர் ஒருவரை ‘இந்தப் பக்கமே வராதே’ என மிரட்டும் விடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகப் பரவியது.       

இந்நிலையில் அந்த விடியோ குறித்து பிரிஜ் பூஷன் சரண் புதனன்று  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆமாம்; அது என்னுடைய விடியோதான். சில தினங்களுக்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதன்காரணமாக குறிப்பிட்ட தினத்தன்று பணியில் இருந்த பாதுகாவலர்கள்அந்த நபரை யார் என்று விசாரித்தபோது அவர் பொய் கூறினார். அவர் தன்னுடைய பெயரை ராஜ்குமார் என்று கூறினார். ஆனால் அவரது பெயர் ரெஹ்முதீன். எனவே பொய் கூறியதற்காக நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்.

அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. இருவரும் முகக்கவசம் அணியவில்லை. இது விதிமீறலாகும். கான்பூரில் 16 பேர் மற்றும் லக்னோவில் ஒருவர் என 17 காய்கறி வியாபாரிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.