நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

கரோனா நோயாளிகளை தங்க வைக்கும் இடமாக மாறிய புணே மசூதி

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:33 pm

ANI

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள அஸம் கல்வி மைய வளாகத்தில் இருக்கும் மசூதி, கரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

மசூதியின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் இடைவெளி விட்டு தனித்தனி படுக்கைகள் போடப்பட்டு, கரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக ரமலான் மாதத்தில் சிறப்புத் தொழுகை நடத்த திறந்து வைக்கப்படும் மசூதி, தற்போது கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு இந்த சமயத்தில் உதவ வேண்டியது எங்கள் கடமை என்று மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.