இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இந்தூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கரோனா: அதிர்ச்சித் தகவல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image

சிறைக் கைதிகளுக்கு கரோனா

Updated On :28 ஏப்ரல் 2020, 12:05 pm

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 29,451 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 939 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. 

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தூர் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் பிரவின் ஜாடியா செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்தூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு இருக்கும் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்கள் தற்போது தற்காலிக சிறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.