நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

புணேவில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் பலி

புணேயில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:32 pm

ANI


புணேயில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று மட்டும் புதிதாக 55 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புணேவில் கரோனா பாதிப்பு மொத்தம் 1,319 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,892 ஆக இருக்கும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நிலவரப்படி 8,068 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை 1,076 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 342 பேர மரணம் அடைந்துள்ளனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.