பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற காவலர்கள்

இந்தியாவில் கரோனா  பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரம்.  இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:29 pm

ANI

இந்தியாவில் கரோனா  பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது மகாராஷ்டிரம்.  இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

47 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18,601 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3252 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 4,666 ஆக அதிகரித்துள்ளது; 232 பேர் உயிரிழந்த நிலையில் 572 பேர் குணமடைந்துள்ளனர்

கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கட்டுப்பாடுகளை மீறி, பொதுமக்களில் சிலர் எந்த மனத்தடையும் இல்லாமல் வெளியே சுற்றி வருகிறார்கள்.

அவர்களைத் தடுக்க காவல்துறையினரும் பல்வேறு யுக்திகளைப் பின்பற்றி தண்டனை கொடுத்து வருகிறார்கள். ஆனால் யாரும் திருந்தியதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் காலை வேளையில் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களை, காவல்துறையினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வீட்டில் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், எந்த சமூக பொறுப்பும் இல்லாமல் இவ்வாறு வெளியே நடமாடியவர்களுக்கு பெண் காவலர் ஒருவர் தட்டில் ஆரத்தி எடுத்து, புத்திமதி சொல்லி அனுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.