இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தெலங்கானா - சட்டீஸ்கர்.. 100 கி.மீ., தொடர்ந்து 3 நாள்கள் நடந்தே வந்த சிறுமி மரணம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 10:06 am


ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.

ஜமாலோ மட்கம் என்ற 12 வயது சிறுமி தொடர்ந்து 100 கி.மீ.க்கு மேல் வெயிலில் நடந்து வந்ததால் உடலில் தண்ணீர் உள்ளிட்ட சக்துகளை இழந்து மரணம் அடைந்ததாக பிஜப்பூர் முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கரைச் சேர்ந்த இந்த சிறுமி உட்பட 11 பேர் கொண்ட குழு, மிளகாய் தோட்டத்தில் வேலை செய்ய தெலங்கானாவுக்கு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு இவர்கள் புறப்பட்டனர்.  போக்குவரத்து வசதி இல்லாததால் தொடர்ந்து 3 நாட்களாக இவர்கள் நடந்தே வந்துள்ளனர். இந்த நிலையில், தான் அந்த சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார் என்று மருத்துவர் புஜாரி தெரிவித்துள்ளார்.

போதிய உணவு கிடைக்காமல், நீர்ச்சத்து குறைந்து சிறுமி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதுவதாகவும் அவர் கூறினார். சிறுமியின் உடல் பத்திரப்படுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சிறுமி ஜமாலோவின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக சட்டீஸ்கர் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.