அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தில்லியில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பியோட்டம் 

வடக்கு தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பித்துள்ளனர். 

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 10:22 am

புது தில்லி: வடக்கு தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பித்துள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். 

கரோனா நோய்த் தொற்று சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நான்கு இளைஞர்கள் கரோனா மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர், ஒருவர் உ.பி, ஒருவர் அசாம் மற்றொருவர் தில்லியில் வசிப்பவர் ஆவார். 

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் மெகசின் சாலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் கட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.