அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பஞ்சாப்: கரோனா பாதித்த காவல் உதவி ஆணையர் மரணம்

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 9:56 am

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

இந்தியாவில், முதல் முறையாக கரோனா பாதித்து காவல்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். 

லூதியாணாவில் உள்ள எஸ்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் கோலி இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த தகவலை மாவட்ட மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்த மருத்துவமனை மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவில் கரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.