/

ரூ.33.81 கோடியை மக்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கும் இந்திய ரயில்வே

கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரூ.33.81 கோடியை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்திய ரயில்வே திருப்பி அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:28 pm

UNI

சிலிகுரி: கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரூ.33.81 கோடியை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்திய ரயில்வே திருப்பி அளித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவையை முற்றிலும் ரத்து செய்தது இந்திய ரயில்வே. முதலில் ஏப்ரல் 14ம்  தேதி வரை அனைத்து ரயில்களையும் ரத்து செய்த இந்திய ரயில்வே, பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மே 3 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இதையடுத்து, ஏப்ரல் 14-ம்  தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்களை முன்பதிவு செய்திருந்தவர்கள் 2,43,939 பேர் ஆகும், இந்த வகையில், இவர்களுக்கு மட்டும் இந்திய ரயில்வே சுமார் 22.41 கோடியை திருப்பி செலுத்தியது.

இதேபோல இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15ம் தேதி ரயில் சேவை ரத்து நடவடிக்கையால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த 1,23,716 பயணிகளுக்கு ரூ.11.40 கோடியை இந்திய ரயில்வே திருப்பி அளித்துள்ளது.

இந்த வகையில், நேற்று வரை இந்திய ரயில்வே ஒட்டுமொத்தமாக ரூ.33.81 கோடியை பொதுமக்களுக்கு திருப்பி அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.