இந்திய கடற்படை வீரர்கள் 20 பேருக்கு கரோனா உறுதி; ஒரே வீரர் மூலம் பரவியது
மும்பை கடற்படை தளத்தில் பணியாற்றி வரும் 20 கடற்படை வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பை: மும்பை கடற்படை தளத்தில் பணியாற்றி வரும் 20 கடற்படை வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஐஎன்எஸ் ஆங்ரி கடற்படைத் தளத்தில் பணியாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கடந்த 7-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருடன் பணியாற்றிய 20 கடற்படை வீரர்களுக்கும் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 20 பேருக்கும், ஒரே கடற்படை வீரரிடம் இருந்து தொற்று பரவியிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை வீரர்கள் வசித்து வந்த பகுதிகள் முற்றிலும் கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தியாவிலேயே கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. மும்பையிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவுக்கு 480 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...