/

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி; 2 பேர் உயிரோடு கருகினர்

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஆலம்புரம் கிராமம் அருகே நிலை தடுமாறி சாலையோரம்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:27 pm

UNI

எலுரு: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஆலம்புரம் கிராமம் அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில், எதிர்பாராதவகையில் தீப்பற்றி எரிந்தது. இதில், லாரியில் இருந்த ஓட்டுநரும், உதவியாளரும் தீயில் கருகி பலியாகினர்.

தபலிகுடேம் என்ற பகுதியில் இருந்து தனுக்கு என்ற இடத்துக்கு ரசாயன பேரல்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் லாரியில் தீப்பற்றி, லாரி ஓட்டுநரும், உதவியாளரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

லாரியில் தீப்பற்றிய சில விநாடிகளில் லாரி முழுவதும் எரிந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.