பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

அலுவலகத்திற்கு வருகிறீர்களா? வேலையை விட்டுப் போகிறீர்களா?: கறார் காட்டும் அரசுத்துறை

அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:26 pm

IANS

புது தில்லி: அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 10,541 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 358 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய அரசுத் துறைகளுக்கு மட்டும் இந்த ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவை செயலாற்றி வருகின்றன.

இந்நிலையில் அலுவலகத்திற்கு வருகிறீர்களா? அல்லது வேலையை விட்டுப் போகிறீர்களா? என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தானிய விநியோகம் மற்றும் கையிருப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களைக் கையாண்டு வருகிறது. ராம் விலாஸ் பாஸ்வான் இத்துறைக்கு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் நாடுமுழுவதும் இத்துறையில் ஊழியர்களின் வருகைப்பதிவு குறைவாக உள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் ஏப்ரல் 13-ஆம் தேதியிட்டு எச்சரிக்கும்படியான சுற்றறிக்கை ஒன்று அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளில் யாருக்கெல்லாம் பணியில் தொடர விருப்பம் ல்லையோ, அவர்கள் தங் களது நிலையை வரும் 20-ஆம் தேதிக்குள் தெளிவுபடுத்தினால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க எதுவாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பினை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.