திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஊரடங்கையும் தாண்டி பிரியாணியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கர்நாடக எம்எல்ஏவின் பிறந்தநாள்

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிச் சடங்குகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கூட ஒரு சில உறவினர்களோடு நடத்தி முடிக்கப்பட்ட

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 9:50 am


கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிச் சடங்குகளும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கூட ஒரு சில உறவினர்களோடு நடத்தி முடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், எது ஒன்றும் எங்களை தடுத்து நிறுத்தாது என்ற வகையில் கர்நாடக மாநிலத்தில் துருவெக்கேரே பாஜக எம்எல்ஏ ஜெயராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் குப்பி தாலுகாவில் உள்ள இடகுரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வெகுக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

தொண்டர்கள் பலரும் திரண்டு, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுமார் 500 பேருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. 

இதில் மிக சுவாரஸ்யம்  என்னவென்றால், இந்த நிகழ்ச்சியின் போது பேசிய எம்எல்ஏ, கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது பற்றி கூறியதுதான்.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்களது விமரிசனத்தை முன் வைத்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.