பிரியாணி செய்து தெரு நாய்களுக்கு வழங்கும் ஹைதராபாத் இளைஞர்
சுயதொழில் செய்து வரும் இளைஞர் ஒருவர் தன் கையால் பிரியாணியை சமைத்து வந்து தெருவோர நாய்களுக்கு அளித்து மகத்தான சேவையாற்றி வருகிறார்.


ஹைதராபாத்: சுயதொழில் செய்து வரும் இளைஞர் ஒருவர் தன் கையால் பிரியாணியை சமைத்து வந்து தெருவோர நாய்களுக்கு அளித்து மகத்தான சேவையாற்றி வருகிறார்.
ஹைதராபாத்தில் ஆனந்த் நகர் காலணியைச் சேர்ந்த கல்யாண் குமார், தினந்தோறும் வீட்டிலேயே பிரியாணி செய்து தெருவோர நாய்களுக்கு வழங்கி வருகிறார். தினமும் 10 கிலோ அரிசி மற்றும் 8 கிலோ கோழிக்கறியை வாங்கி வந்து வீட்டிலேயே பிரியாணி செய்கிறார். அதனை தன் கையாலேயே நாய்களுக்கு வழங்குகிறார். இவருடன் நண்பர்களும் கைகோர்த்து, தெருத் தெருவாகச் சென்று நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் மருத்துவமனை வாசல்களில் இருந்த மனிதர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வந்தேன். அப்போதுதான் பலரும் உணவு மற்றும் தண்ணீரை வீணடிப்பதைப் பார்த்தேன். அதனால் விலங்குகளுக்கு உணவளிக்க முடிவு செய்தேன் என்கிறார் உற்சாகமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...