இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார்!

கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

News image

கரோனா வைரஸ்

Updated On :7 ஏப்ரல் 2020, 1:16 pm

கொச்சி: கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4858 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக நாங்கள் உருவாக்கி வந்த வடிவம் திங்களன்று தயாராகியுள்ளது. முழுமையான சமூக அளவிலான சோதனை நடத்தும் நிலை உருவானால் அதை எதிர்கொள்ளவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொருத்து இதை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லலாம். சோதனை செய்வோர்  தங்களது பரிசோதனை மாதிரிகளை அதில் அளித்தவுடன் அங்கிருந்து அது மத்திய பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.