/

மும்பையை மீண்டும் மிரட்டும் மழை: 2-3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. எனினும் இது கன மழையாக இருக்கவில்லை.

News image
Updated On :14 செப்டம்பர் 2019, 9:23 am


புது தில்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. எனினும் இது கன மழையாக இருக்கவில்லை.

கொலாபாவில் 6.2 மி.மீ. மழையும், சான்டா க்ரூஸ் பகுதியில் 41.3 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேப்போல, தில்லி, குருக்ராம், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதே சமயம், இந்த மழை கன மழையாக இருக்காது என்றும், நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றும் சொல்லியிருப்பது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.