ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு, இவர் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சேரியில் வாழும் குழந்தைகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்துள்ளார். பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் ஆன பிறகு தான் பணியாற்றிய தாத்ரா நகர் ஹவேலி பகுதிக்கு தனிப்பட்ட முறையில் 1 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளதாகவும் தகவல் உள்ளது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது, தனது மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அவர் தோளில் சுமந்து சென்ற புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.