பாட்னா: நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடிய சம்பவம் நிகழந்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடுமுழுவதும் வியாழனன்று ஆசிரியர்கள் தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஆசிரியர்கள் தினத்தன்று ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடிய சம்பவம் நிகழந்துள்ளது.
பிகார் மாநிலம் முழுவதும் நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஊதியம் மற்றும் இதர வசதிகளில்பெரும் வேறுபாடு உள்ளது. இதனைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் வியாழன்று ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடந்துள்ளது. பாட்னாவின் கர்தானிபாஹ் பகுதியை அடைந்த அவர்கள் அங்கிருந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக கோஷமிட்டு பேரணி நடத்தியுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள ஆசியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விதமாக வியாழன்று நடைபெறும் விழாவில் பங்கேற்காத இவர்கள், விருதுகளைப் புறக்கணிக்குமாறு தேர்வான ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிமெடுப்பதில்லை என்று தெரிவித்த ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவரான மார்க்கண்டே பதக், கோரிக்கைகளநிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கம்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் உள்பட இருவா் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


