கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஹரியாணாவில் ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

News image

ஆட்சியமைக்க உரிமைகோரினார் மனோகர் லால் கட்டர்

Updated On :26 அக்டோபர் 2019, 11:48 am


சண்டிகர்: ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.

மத்திய அமைச்சர்கள் ரவி ஷங்கர் பிரசாத், ஹரியாணா பாஜக தலைவர் சுபாஷ் பராலா, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சௌதாலா உள்ளிட்டோருடன் இன்று ஹரியாணா ஆளுநரை நேரில் சந்தித்த மனோகர் லால் கட்டர் இரு கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.

முன்னதாக இன்று நடைபெற்ற  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹரியாணா பாஜக சட்டசபைக் குழுத் தலைவராக மனோகர் லால் கட்டர் தேர்வு செய்யப்பட்டார்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஜேஜேபி தலைவா் துஷ்யந்த் சௌதாலாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.