கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

உ.பியில் கொடூரம்: பிறந்து சில மணி நேரங்களில் பெண் குழந்தை உயிருடன் எரிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :15 அக்டோபர் 2019, 12:26 pm

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்டு, தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று பல சமூக அமைப்புகளும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றன. இருந்த போதிலும், பிறந்த பெண் குழந்தைகளை சிசுக்கொலை செய்யும் சம்பவங்கள் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த உடனேயே பெண் குழந்தை ஒன்று தீக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து விசாரணை செய்ததில், பெண் குழந்தை என்பதால் கொலை செய்ய முயற்சிதந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முதற்கட்டமாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். குழந்தையின் உடல் முழுவதுமே தீக்காயங்கள் இருப்பதால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.