கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கெரமக்கியில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் மூன்று வயது தலித் சிறுவன், அங்குள்ள ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ளான். அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் உதவியாளர் சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கன்வாடி ஆசிரியர் மாலாவுக்கும் உதவியாளர் மஞ்சுலம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்ட போது இடையே சிறுவன் வந்துள்ளான். இவர்கள் இருவரது சண்டையைப் பார்த்து பயத்தில் அவன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கோபத்தில் சிறுவனின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை செய்ய முயற்சித்ததாக ஐ.பி.சி பிரிவு 308 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மல்லந்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


