2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெரியார் தொடர்பான 'அறிவுசார் பயங்கரவாத' கருத்து: பாபா ராம்தேவ் உறுதியான நிலைப்பாடு

பெரியாரைப் பின்பற்றுபவர்கள் “அறிவுசார் பயங்கரவாதத்திற்கு” ஆதரவளிப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:12 pm

ENS

பெரியாரைப் பின்பற்றுபவர்கள் “அறிவுசார் பயங்கரவாதத்திற்கு” ஆதரவளிப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும், பதஞ்சலி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற கோஷங்கள் சுட்டுரையில் பரவியது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஐந்து நாள் இலவச யோகா முகாமை நடத்தி வரும் ராம்தேவ், தலித்துகளுக்கு ‘சன்யாச தீட்சை’ வழங்கியதாகவும், மக்களை தங்கள் சாதிகள் அல்லது மதங்களின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு பார்த்ததில்லை என்று கூறினார். மேலும் தன்னை பின்தங்கியவர்களுக்கு எதிரானவர் என்று வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும் சாடினார்.

பாபா ராம்தேவ் மீண்டும் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

"பெரியாரைப் பின்பற்றுபவர்கள் சமுதாயத்தில் எதிர்மறையை அதிகரித்துள்ளனர் என்பதை நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். கடவுளைப் பின்பற்றுபவர்கள் முட்டாள்கள், கடவுளை வணங்குபவர்கள் குற்றவாளிகள் என்பதே பெரியாரின் கருத்து. ஆனால், இந்தியாவில் கடவுளின் மூலம் தான் நாம் நேர்மறையான சிந்தனையை வலுவாகப் பரப்புவதற்கும், நம்புவதற்கும் சிறந்த கலாச்சாரம் நம்மிடம் உள்ளது. 

பிரிவினை சக்திகள் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் நான் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. அதே நேரத்தில் எதிர்மறையானது வெற்றிபெறாது என்பதை தெளிவுபடுத்துவதற்கு நான் இருக்கிறேன். இதனால் தான் நான் சாதியத்தை பின்பற்றுகிறேன் என்று சிலர் வேண்டுமென்றே பரப்பிவிடுகிறார்கள். அது உண்மையாக இருந்தால், நான் ஏன் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கப்போகிறேன்.

#ArrestRamdev என்ற கோஷம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் பிரபலமடையத் தொடங்கியதும், #Salute_Baba_Ramdev என்பதும் பிரபலமடைந்தது. எப்போதும் எதிர்மறையை எதிர்கொள்ள நேர்மறை அதன் இருப்பை உணர வைக்கிறது. பதஞ்சலி ஆயுர்வேத் தொழிலை செழுமையாக்க ஒரு ‘ஃபக்கீர்’ (மத சந்நியாசி) தேவையில்லை. தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவது அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

நாட்டைப் பிளவுபடுத்த பெரியார் கையாண்ட ஆரிய மாயை பொய் பிரசாரங்கள் மக்களிடம் என்றும் எடுபடாது என்று ராம்தேவ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.