ராய்கஞ்ச்: மேற்கு வங்க மாநிலத்தில், வரதட்சிணைக் கொடுக்காததால் கர்ப்பிணியைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தினாஜ்புர் மாவட்டத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், கொல்லப்பட்ட சபீனா கதுனின் கணவர் ரஹ்மான் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சபீனாவின் தந்தை அளித்த புகாரில், ரஹ்மான் - சபீனா திருமணத்தின் போது வரதட்சிணையாக ரூ.8 லட்சம் பணமும், 50 கிராம் தங்க நகைகளும் கொடுக்கப்பட்டது. அப்போது ரஹ்மான் பள்ளி ஆசிரியராக இருந்தார்.
திருமணம் முடிந்த 6 மாதத்தில், மேலும் ரூ.5 லட்சம் வரதட்சிணை வேண்டும் என்று கேட்டு மகளைக் கொடுமைப்படுத்தினார்கள். அதனை கொடுக்க முடியாததால், கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சபீனாவை, அவரது கணவர் மற்றும் மூன்று பேர் சேர்ந்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, ராய்கஞ்ச், கலியாகஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் வீசிவிட்டனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


