இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தப் போட்டியில் சிவசேனா தான் வெற்றி பெறும்: சஞ்சய் ராவத் திட்டவட்டம்!

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் சிவசேனா கட்சி தான் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

News image
சஞ்சய் ரௌத் எம்.பி
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

Muthumari

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் சிவசேனா கட்சி தான் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், ஆட்சி அமைப்பது குறித்து பாஜக - சிவசேனாவுக்கு இடையே இழுபறி நீடித்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே இரு கட்சியும் கூட்டணியில் இருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியில் சமபங்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒத்துழைக்காததால் பாஜக - சிவசேனா இடையே இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜகவுடன் உடன்பாடு எட்டப்படாத சமயத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது. 

இவ்வாறான குழப்பங்களுக்கு இடையே, சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான  சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் முதல்வர் போட்டியில் சிவசேனா கட்சிதான் வெற்றி பெறும். பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்கும். மகாராஷ்டிராவில் அரசியல் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவசேனா காட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள். முதல்வர் பதவியில் சமபங்கு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது நீதிக்கான போராட்டம். இந்த போராட்டத்தில் சிவசேனாவுக்கே வெற்றி கிடைக்கும். சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.