ஆயிரக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ஆந்திரப் பிரதேச முதல்வராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (46) பதவியேற்றுக் கொண்டார்.
கட்சித் தொடங்கிய 9 ஆண்டுகளில் எந்த பெரும் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரத்தின் 2-ஆவது முதல்வராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று நண்பகல் 12.25க்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில் முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான ஆந்திர மக்களும் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக முதல்வராகும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்து, பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் ஆளாக தனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது கரகோஷம் விண்ணை முட்டியது.
இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் மட்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் வரும் ஜூன் 7-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதுவரை இல்லாத வகையில், ஆந்திர முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சியை தில்லியில் உள்ள ஆந்திர அரசு இல்லத்தில் காணொலிக்காட்சி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


