புது தில்லி: இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் ரஷியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணையானது சுமார் 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து விண்ணுக்கு ஏவி பிரமோஸ் பரிசோதிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஏவுகணையானது 2003-ம் ஆண்டு கடலில் இருந்து விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

ரயில்வே துறையில் ஆள் குறைப்பு முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட், மதிமுக கோரிக்கை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


