அகமதாபாத்: பிரபல ஆங்கில செய்தித் தளத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்குகளை மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி வாபஸ் பெற்றுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரபல அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி. இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராவார். இவரது குழும நிறுவனங்களான அதானி பவர் மஹாராஷ்டிரா லிமிட்டட் மற்றும் அதானி பெட்ரோ நெட் போர்ட் தகேஜ் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் , அதன் செயல்பாடுகளைப் பற்றி, பிரபல ஆங்கில செய்தித்தளமான 'தி வயர்' தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுரைகள் வெளிவந்தன.
இதனால் அந்த தளத்திற்கும் அதன் நிறுவன ஆசிரியர்கள் சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, மோனோபினா குப்தா , பமீலா பிலிப்போஸ் மற்றும் நூர் முஹம்மது ஆகியோருக்கு எதிராக, அகமதாபாத் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் அதானி குழுமத்தால் தொடரப்பட்டிருந்தன.
இந்நிலையில் தி வயர் ஆங்கில செய்தித் தளத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்குகளை மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி வாபஸ் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சித்தார்த் வரதராஜன், 'இதுதொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவதாகவும், அது நிறைவடைந்த பிறகு முழுமையான அறிக்கை வெளியிடுவதாகவும்' தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


