மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், போபால் தொகுதியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கர் மாவட்டத்தில் திக்விஜய் சிங் வாக்கு உள்ளது. ஆனால், அவர் அங்கு சென்று வாக்களிக்கத் தவறிவிட்டார். இதுகுறித்து திக்விஜய் சிங் அளித்த விளக்கத்தில்,
நான் ராஜ்கர் சென்று வாக்களிக்காததற்கு வருந்துகிறேன். அடுத்தமுறை போபாலில் எனது பெயரை நிச்சயம் பதிவு செய்வேன் என்று கூறியவர், மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை போபாலில் உள்ள கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங், எப்படியாவது முயற்சி செய்து எனது வாக்கை பதிவு செய்வேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


