புது தில்லி: வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிடக் கோரி, 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தெலுங்கு தேசம் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக்தாந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் மக்களவைத் தேர்தலில், ஒரு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் முதல் 3 கட்ட வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதைத் தொடர்ந்து வாக்கு ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிடக் கோரி 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை வரும் வாரத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


