லக்னௌ: வாராணசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சுயேச்சை வேட்பாளராக அறிமுகமாகி, பிறகு சமாஜ்வாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜ் பகதூர், ஏற்கனவே எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் உணவு குறித்து விடியோவில் புகார் கூறியதால், கடந்த 2017ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டவர்தான்.
வேட்பு மனு நிராகரிப்பு குறித்து அவரது வழக்குரைஞர் கூறுகையில், எங்களிடம் தேவையான ஆவணங்களைக் கேட்டனர். அனைத்தையும் நாங்கள் அளித்தோம். ஆனாலும் வேட்பு மனு தகுதியானது அல்ல என்று நிராகரித்துவிட்டனர். நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார்.
மோடிக்கு எதிராகக் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே வாராணசி தொகுதியில் இவர் சுயேச்சையாகக் களமிறங்கினார். பிரசாரத்தின் போது பேசிய யாதவ், நான்தான் உண்மையான காவலாளி. நமது விவசாயிகளுக்காவும், வீரர்களுக்காவும் நான் போராடுவேன் என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


